பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
11:07
ஜோத்பூர்: உலகின் மிக உயரமான, 25 லட்சம் ருத்ராட்சங்களாலான சிவலிங்கம், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜோத்பூருக்கு அருகேயுள்ள சச்சியா மாதா கோவிலில், 25 லட்சம் ருத்ராட்சங்களால் செய்யப்பட்ட, 33 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில், இந்த சிவலிங்கத்தை உருவாக்குவதற்கான பணிகள் துவங்கப்பட்டன. சிமென்ட், சரளை மற்றும் பிற கட்டுமானப் பொருட்களை வைத்து, சிவலிங்கம் உருவாக்கப்பட்டு, அதன் மீது, 25 லட்சம் ருத்ராட்சங்கள் பதிக்கப்பட்டன. சிவலிங்கம் நிறுவப்பட்ட நிகழ்ச்சியில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.