பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
11:07
உடுமலை: உடுமலை சுற்றுவட்டார கோவில்களில் ஆடிமாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடிமாதம் என்றாலே ஆன்மிகத்துக்கு உரிய மாதம் என்பது போல் கோவில்களில் விழாக்கள், விேஷக பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் செய்யப்படும். ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் கூல் ஊற்றுதல், வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு என கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கலைக்கட்டும். இந்நிலையில் நேற்று ஆடிமாத பிறப் பையொட்டி உடுமலை சுற்றுவட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் உட்பட, 16 வகையான பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டு, மகா தீபாரதனையும் நடந்தது. இன்று காலை , 10 மணிக்கு திருவாசகம் முற்றோதல் மற்றும் நாராயணியம் படிக்கப்படுகிறது. தொடர்ந்து ஆடிமாதம் முழுவதும், அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.