ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ஆடிவிழா: நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2017 01:07
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள்கோயில் ஆடிப்பூரத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை 9:00 மணிக்கு கொடியேற்றுத்துடன், சிங்கம்மாள் குறடு, வானாமாமலை மண்டபங்களில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளலும், மாலையில் வீதிபுறப்பாடும், இரவு பதினாறு வண்டி சப்பரமும் நடக்கிறது. தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவு வீதிபுறப்பாடு , ஆண்டாள் ஆடிப்பூர பந்தலில் தினமும் மதியம் 2:00 மணிமுதல் இரவு 10:00 மணி வரை பல்வேறு கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஜூலை 27 அன்று தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா மற்றும் அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.