கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆடிக்கார்த்திகை நன்னாளான இன்று முருகனை வழிபட்டு வாழ்வில் சகல வளமும் பெறுங்கள்.* நிலவாக பிரகாசிக்கும் முருகா! என் கண்கள் காண்பதாக இருந்தால் உன் திருவடிகளை காணட்டும். என் உதடுகள் உன் திருப்புகழை பேசட்டும். இரவும் பகலும் என் மனம், உன் பெருமையை மட்டும் சிந்திக்கட்டும். இந்த அரிய வரத்தை தந்தருள வேண்டும்.* மாமரமாய் நின்ற சூரனை பிளந்தவனே! கற்றவர் புகழும் ஞான பண்டிதனே! செவ்வானம் போல சிவந்த மேனியனே! கடம்ப மலரை விரும்பி அணிபவனே! அறிவுக்கண்ணைத் திறந்து ஞானம் அருள்வாயாக.* கருணைக்கடலே! கந்தனே! சிவனின் நெற்றிக்கண்ணில் உதித்த அருட்சுடரே! வண்ண மயில் மீது வலம் வருபவனே! வள்ளி மணாளனே! இதயமாகிய குகையில் வீற்றிருக்கும் குகனே! உனது திருவடிகளை சிந்திக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக.* திருமாலின் மருமகனே! தெய்வானை மணாளனே! சேவல் கொடியோனே! பார்வதி பெற்ற பாலகனே! மயில் வாகனனே! கார்த்திகேயனே! கிரகதோஷம் தாக்காமல் கருணை புரிய வேண்டும்.* மலைக்குத் தெய்வமான குறிஞ்சிநாதனே! அன்பர் குறை தீர்ப்பவனே! மயிலேறும் மாணிக்கமே! தயாபரனே! முன்செய்த பாவத்திலிருந்து விடுவித்து, வாழ்க்கைப் பயணத்திற்கு வழித்துணையாய் வந்தருள்வாயாக.* கார்த்திகைப் பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்ட தவப்புதல்வனே! சரவணப் பொய்கையில் தவழ்ந்தவனே! தந்தைக்கே பாடம் சொன்ன குருநாதனே! செல்வச்செழிப்பைத் தந்தருள்வாயாக.