பதிவு செய்த நாள்
19
ஜூலை
2017
11:07
ஆர்.கே.பேட்டை: பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோவிலில், நேற்று, மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. ஆர். கே. பேட்டை அடுத்த, கோபாலபுரம் மற்றும் புதுார் கிராமம் அருகே, சோளிங்கர் –- சித்துார் நெடுஞ்சாலையில், ஆறுபடை வீடுமுருகர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக, பஞ்சமுகஹேரம்ப விநாயகர் கோவில் கட்டி முடித்து, கடந்த மாதம், 1ம் தேதி கோவில் கோ புர விமானம் மற்றும் மூலவருக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அன்று முதல், அடுத்த 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் விழா நடந்தது வந்தது. நேற்று, மண்டலாபிஷேகம் நிறைவு விழா கோவில் வளாகத்தில் நடந்தது. ஒரு யாகசாலை
,ஐந்து கலசங்கள் அமைத்து சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, மூலவருக்கு கலச நீர் ஊற்றி, மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.