புதுச்சேரி : தருமாபுரி ஆஞ்சநேயர் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது. மேட்டுப்பாளையம் அடுத்த தருமாபுரி ஆஞ்சநேயர் கோவில் வருடாபிஷேகம் 18ம் தேதி மாலை 5.30 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கும்பஸ்தாபனம், அனுமன் மூல மந்திர ஹோமம் நடந்தது. 19ம் தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், ராமமந்திர ஹோமமும், 8.30 மணிக்கு பால்குட அபி ஷேகமும், 10.20 மணிக்கு திருமஞ்சனமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சீதாராம கல்யாண உற்சவம். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.