பதிவு செய்த நாள்
22
நவ
2011
11:11
குளித்தலை: அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவார நிகழ்ச்சி வெகுசிறப்பாக துவங்கியது. குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையில் 1,117 படிகள் கொண்ட ரத்தினகீரிஸ்வரர் மலைக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திங்சோமவாரம் நிகழ்ச்சி நடத்தப்படும். நேற்று கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமை என்பதால், சோமவாரம் விழா துவங்கியது. அதில் குளித்தலை, தோகமலை, மாயனூர், கரூர், மணப்பாறை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ரத்தினகிரீஸ்வரர் குடிப்பாட்டுக்காரர்கள் குடும்பத்துடன் சென்று, விவசாய நிலத்தில் பயிரிட்ட கடலை, பருப்பு, நெல், கேழ்வரகு தானியங்களை மலையின் அடிவாரத்தில் உள்ள பொன்னிடும்பாறையில் கொட்டி, பய பக்தியுடன் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.