பதிவு செய்த நாள்
19
ஜூலை
2017
04:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 27 ல் தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி காலை 9 :00 மணிக்கு மாடவீதிகள், ரதவீதிகள் சுற்றி கொடிபட்டம் கோயிலுக்கு கொண்டுவர, கொடிமரத்திற்கு ராஜீபாலாஜி பட்டர் சிறப்பு பூஜைகள் செய்து கொடி ஏற்றினார்.தொடர்ந்து வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். மணவாளமாமுனிகள் ஜீயர் சுவாமிகள், தக்கார் ரவிசந்திரன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், உதவி ஆணையர் ஹரிஹரன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
இதன்பின் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளல் நடந்தது. 5ம் நாள் ( ஜூலை 23ல்) கருடசேவை, 7 ம் நாள் (ஜூலை 25ல் )ஆண்டாள், ரெங்கமன்னார் சயனத்திருக்கோலம், எட்டாம் நாள் திருவிழாவில் (ஜூலை 26ல் )மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீரெங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் இருந்து பரிவட்டங்கள் பிரசாதமாக கொண்டுவரப்பட்டு ஸ்ரீஆண்டாளுக்கு சாற்றப்படும். ஒன்பதாம் நாள் (ஜூலை 27ல்) காலை 8 :00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.