பதிவு செய்த நாள்
24
ஜூலை
2017
12:07
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள், பாத யாத்திரையாக சென்று அம்மனை வழிபட்டனர்.ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், அபிஷேகம் நடந்தது. ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், லட்சிவாக்கம், தண்டலம், சூளைமேனி, சென்னங்காரணி, பனப்பாக்கம், குமரப்பேட்டை, ஆரணி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து, பவானியம்மனை தரிசித்தனர். மேலும், கோவிலில் பக்தர்கள் அலகு குத்தியும், வேப்பிலை ஆடை அணிந்தும், தரையில் உருண்டும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.