நீரில் விபூதியைக் குழைத்து மூன்று கோடுகளாக நெற்றியில் தரிப்பதற்கு திரிபுண்டரம் என்று பெயர். இப்படி இட்டுக்கொள்பவரின் தீய வினைகள் அப்போதே அழிந்து போகும் என்கிறது. விபூதி மகாத்மியம். நடுப்பகலுக்கு முன்பாக விபூதி இட்டுக் கொள்ளும்போது இப்படி தரிக்க வேண்டும். விபூதிக்கு பஞ்சாட்சரம் என்ற பெயர் உண்டு. அதனால் விபூதியை தரிக்கும் போதும், பிறருக்குத் தரும் போதும் பஞ்சாட்சரம் (ஓம் நமசிவாய) சொல்ல வேண்டும் என்பது ஐதீகம்.