Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்ககிரி ஓங்காளியம்மன் கோவிலில் ... புதுச்சேரி சனீஸ்வர பகவான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுதாவூர் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் எப்போது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2017
02:07

சிறுதாவூர் : சிறுதாவூரில் அமைந்துள்ள பழமையான சிவன் கோவிலின் நிர்வாகம், அறநிலையத்துறை வசம் மாறியும், திருப்பணிகள் முடிக்கப்படாமல், கும்பாபிஷேகம் நடத்துவது பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, பூதகிரீஸ்வர் கோவில் உள்ளது. கோவிலின் அருகே பழமையான குளமும் உள்ளது.
இவற்றை சீரமைக்க, 2009ம் ஆண்டில் திருப்பணிகள் துவங்கின.

திருப்பணிகள் காரணமாக, கோவிலில் இருந்த விலை உயர்ந்த ஐம்பொன் சிலைகள், 2011ம் ஆண்டில் இதே பகுதியிலுள்ள பஜனை கோவிலில் வைக்கப்பட்டது. அவற்றை, 2013ல், மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றனர். மாவட்ட போலீசார் மேற்கொண்ட முயற்சிகளை அடுத்து, சிலைகள், ஒரு வாரத்தில் மீட்கப்பட்டன. இதையடுத்து, சிலைகள் அனைத்தும் பாதுகாப்பு கருதி அறநிலையத்துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

பிறகு, கிராம வழிபாட்டுக் குழுவினரின் பராமரிப்பிலிருந்த இக்கோவிலை, அறநிலையத் துறையைச் சார்ந்த திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நிர்வாகம் ஏற்க காஞ்சி உதவி ஆணையர் உத்தரவிட்டார். தற்போது, கந்தசுவாமி கோவில் நிர்வாகம், சிறுதாவூர் கோவிலின் ஏலம் உள்ளிட்ட நிர்வாக பணிகளை கவனித்துவருகிறது. இவ்வாறு, அறநிலையத்துறையின் வசம் கோவில் நிர்வாகம் மாறி, மூன்று ஆண்டுகளாகியும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள திருப்பணிகள் மீண்டும் தொடங்கப்படாமல் இருப்பது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

இதனால், இக்கோவிலில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த பிரதோஷ வழிபாடுகள் தடைப்பட்டு நிற்பதாக பக்தர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே, தடைப்பட்டுள்ள திருப்பணிகளை விரைந்து முடித்து, கோவில் கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்த வேண்டும் என்பதே சிறுதாவூர் கிராம வாசிகள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar