ஆண்டிபட்டி: சக்கம்பட்டியில் குல தெய்வ வழிபாட்டு விழா நடந்தது. சக்கம்பட்டி மேலத்தெருவில் உள்ளசீலைக் காரியம்மன், அய்யனார், கருப்பசாமி கோயில்களில் நடந்த விழாவில் முதல்நாளில்பல்வேறு ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் சுவாமி, அம்மனுக்கு அபிேஷகம்செய்யப்பட்டது. யாகசாலை அமைத்து வேத மந்திரங்கள் முழங்க வழிபட்டனர். சுவாமிகளுக்கு சிறப்பு படையல் செய்து நள்ளிரவு பூஜை, வழிபாடு செய்தனர். அன்னதானம் நடந்தது.