பதிவு செய்த நாள்
24
நவ
2011
12:11
கோபிசெட்டிபாளையம்: கோபி பெரியகரட்டுப்பாளையம் நீலியம்மன், வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நவ., 30ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நவ., 28ம் தேதி காலை, 9 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடக்கிறது.29ம் தேதி காலை 11 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், மாலை 6 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாஹம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கலசஸ்தாபனம், இரவு 8 மணிக்கு முதற்கால யாக வேள்வி, இரவு 9 மணிக்கு மருந்து சாற்றுதல் நடக்கிறது.வரும், 30ம் தேதி காலை 7 மணிக்கு மண்டபார்ச்சனை, திரவிய ஹோமம், இரண்டாம் கால யாக வேள்வி, காலை 10 மணிக்கு யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்படுதல், 10.15 மணிக்கு கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம், 10.45 மணிக்கு விநாயகர், நீலியம்மன், வீரமாத்தி அம்மன், கருப்பராய ஸ்வாமிக்கு மகா கும்பாபிஷேகம், 11.45 மணிக்கு மஹாபிஷேகம், தச தரிசனம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.