கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சமேத பத்மாஸனி தாயார் கோயிலில் மழை பெய்ய வேண்டி, கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்களால் வருண ஜெப வேள்வி நடந்தது. பத்மாஸனித்தாயார் ஊஞ்சல் சேவை மண்டபத்தின் முன்புறத்தில் நாலாயிரதிவ்ய பிரபந்தப்பாடல்கள் பாடப்பட்டன. கடந்த ஜூலை 25 முதல் 30 (நேற்று வரை) 5 நாட்கள் வருண சங்கல்ப, பிராயசித்த, ஷேம திவ்ய பாசுரங்கள் ஓதப்பட்டன. ஸ்தானிகர் ஜெயராம் பட்டர், கோயில் பேஷ்கார் கண்ணன் ஆகியோர் தலைமையில் நடந்தது. ஏற்பாடுகளை பத்மாஸனித்தாயார் கைங்கர்ய சபையினர் மற்றும் ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.