பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
01:07
ஆர்.கே.பேட்டை : அம்மையார்குப்பம் காமாட்சியம்மன் கோவிலில், ஆடி மாதத்தை ஒட்டி, தினசரி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்து வருகிறது. மஞ்சள் நீர் அபிஷேகமும், சந்தனகாப்பு அலங்காரத்திலும் அம்மன் அருள்பாலித்து வருகிறார். ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மயைார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது காமாட்சியம்மன் கோவில். ஆடி மாதத்தை ஒட்டி, அம்மனுக்கு பல்வேறு உபயதாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில், சிறப்பு உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. தினசரி மஞ்சள் நீர் அபிஷேகமும், சந்தனக்காப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வெள்ளி, செவ்வாய் கிழமைகளில், உற்சவர் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்விக்கப்படுகிறது. காலை முதல், மாலை வரை திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். நேற்று முன்தினம், இரவு நடந்த சிறப்பு உற்சவத்தில், காமாட்சியம்மன் பூ பல்லக்கில் வீதியுலா எழுந்தருளினார். பெண்கள், ஆரத்தி எடுத்து அம்மனை வணங்கினர். படவேட்டம்மன் கோவில் தெரு, எல்.என்.கோவில் தெரு, பஜார் வீதி வழியாக ஊர்வலம் நடந்தது. இதே போல், அம்மயைார்குப்பம், பொன்னியம்மன் கோவிலிலும், ஆடி சிறப்பு உற்சவம் நடந்து வருகிறது.