பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
02:07
திருத்தணி: தணிகை மீனாட்சி அம்மன் கோவிலில், ஆடி மாத உற்சவம், இம்மாதம், 17ம் தேதி துவங்கி, அடுத்த மாதம், 16ம் தேதி வரை நடக்கிறது. திருத்தணி நகராட்சி, பெரிய தெருவில் உள்ள தணிகை மீனாட்சியம்மன் (புறா கோவில்) கோவிலில், ஆடி மாதத்தையொட்டி, ஜாத்திரை திருவிழா மற்றும் ஒரு மாத உற்சவ விழா, கடந்த, 17ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.தினமும், மூலவர் அம்மனுக்கு காலை, 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். இது தவிர ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளிலும், மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.அடுத்த மாதம், 8ம் தேதி ஜாத்திரை திருவிழா மற்றும் அம்மன் திருமுக கரக ஊர்வலம் நடக்கிறது. அன்று காலையில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில், உற்சவர் அம்மன், பூகரகம் ஊர்வலம் நடக்கிறது. இரவு கும்பம் கொட்டும் நிகழ்ச்சி மற்றும் பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.