சாயாவனம் கோயிலில் குழந்தை வாங்கும் திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2017 10:08
மயிலாடுதுறை: நாகை மாவட்டம், சீர்காழி தாலுக்கா பூம்புகார் காவிரிப்பூம்பட்டினத்தில் பல்லவனீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இந்த கோயிலில் திருவெண்காடாராகிய பட்டினத்தடிகள் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பட்டினத்தடிகள் அற்புத திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்து டன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4ம் நாள் திருவிழாவான குழந்தை வாங்கும் விழா நேற்று இரவு அருகில் உள்ள சாயாவனம் கோயிலில் நடைபெற்றது. விழாவை முன் னிட்டு மருதவாணர் குழந்தையாய் வில்வ மரத்தடியில் எழுந்தருள அசரீரி வாக்குப்படி சிவ தொண்டர் சிவசர்மர் சுசீலையுடன் வந்து குழந்தையை கண்டெடுத்தலும், இரவு திரு வெண்காரார் சிவகலையம்மாளுடன் சாயாவனம் கோயிலுக்கு எழுந்தருளி குழந்தையை வாங்கி பாலூட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து குழந்தையுடன் திருவெண்காடார், சிவசர்மர் பல்லவனீஸ்வரம் கோயிலுக்கு திரும்பி அங்கு திருவெண்காடார், சிவசர்மருக்கு, குழந்தையின் நிறைக்கு நிறை பொன் நிறுத்துக்கொடுத்தல் மற்றும் குழந்தையை வெள்ளிக்கட்டிலில் தாலாட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த விழாவில் திரளாக பக்தர்கள் கரந்துகொண்டு சிவபெருமானையும், பட்டினத்தடிகளையும் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கோபி தலைமையில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மற்றும் காவிரிப்பூம்பட்டினம் கிராம வாசிகள் செய்திருந்தனர்.