மதுரை: சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஆக.,7 அன்று இரவில் கோயில் நடைகள் சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அழகர்கோவில் துணை ஆணையர் மாரிமுத்து அறிக்கை: ஆக., 7 இரவு 10:53 முதல் இரவு 12:48 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுவதால் அழகர்கோவில் கள்ளழகர் கோயில், ராக்காயி அம்மன் கோயில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில், மேலுார் ஆஞ்சநேயர் கோயில்களில், அனைத்து பூஜைகளும் மாலை 6:30 மணிக்குள் முடிக்கப்பட்டு, நடைசாத்தப்படும். மறுநாள் காலை 6:00 மணிக்கு நடைதிறக்கப்படும். கள்ளழகர் கோயிலில் ஆக.,7 அன்று தேர் நிலைக்கு வந்தவுடன் மாலை 4:00 மணிக்கு மேல் பூப்பல்லக்கு நடக்கும். கிரகணம் முடிந்ததும் இரவு 1:00 மணிக்கு 18ம்படி கருப்பண்ணசாமிக்கு சந்தனம் சாத்துப்படி நடக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.