மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழாவை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கடந்த, 23ம் தேதி கொடியேற்றத்துடனும் ஆடிக்குண்டம் விழா துவங்கியது. 25ம் தேதி குண்டம் விழா நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் பங்கேற்று விளக்கு பூஜையை சிறப்பித்தனர். இன்று காலை, 8:00 மணிக்கு மறுபூஜையும், வரும் 3ம் தேதி ஆடிப்பெருக்கும் நடை பெற உள்ளன.