திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கொடியிறக்கம் நடந்தது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத்திருவிழா ஜூலை 17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜூலை 25 ல் தேரோட்டமும், 28 ல் திருக்கல்யாணமும் நடந்தது. விழா நாட்களில் சிநேகவல்லிதாயார் பல்லக்கு, கேடகம், காமதேனு,அன்னம், கிளி, வெள்ளி ரிஷபம், குதிரை வாகனங்களில் வீதி உலா வந்தார். நேற்று காலை 10:00 மணிக்கு கொடியிறக்கம் நடந்தது.சிநேகவல்லிதாயாருக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்தன. தேவஸ்தான செயல்அலுவலர் சந்திரசேகர் மற்றும் கிராம நாட்டார்கள் கலந்து கொண்டனர்.