பதிவு செய்த நாள்
01
ஆக
2017
03:08
மானாமதுரை:மானாமதுரையில் தர்ம ரக்க்ஷண சமிதி,தியாக விநோதப்பெருமாள் கோயில் சார்பில் தொடர் ராமாயண ஞானவேள்வி கடந்த 22 ந்தேதி தியாக விநோதப்பெருமாள் கோயிலில் தொடங்கியது.தொடர்ந்து 10 நாட்கள் நடந்த இந்த வேள்வியில் தினமும் மாலை வால்மீகி ராமாயணம்,அயோத்தியா காண்டம்,துளசி கல்யாணம்,ஆரண்ய காண்டம்,கிஷ்கிந்தா காண்டம்,சுந்தரகாண்டம்,யுத்தகாண்டம்,உத்தரகாண்டம்,பட்டாபிேஷகம் ஆகிய தலைப்புகளில் சுவாமி முத்துவடுகநாதசிவம், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மோகனசுந்தரம்,ராமன்,பொற்செல்வி மற்றும் கண்ணன் சொற்பொழிவு ஆற்றினர்.நிறைவு நாளன்று பெருமாளுக்கு அர்ச்சகர்கள் சரவணன்,முரளி சிறப்பு பூஜைகளை நடத்தினர்.ஏற்பாடுகளை தர்ம ரக்க்ஷண சமிதி மானாமதுரை ஒன்றிய பொறுப்பாளர்கள்,கோயில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.