காரியாபட்டி: மல்லாங்கிணர் வி.வி.வி. நகர் நன்மை தரும் நாகம்மாள் திருக்கோயில் ஆடிப் பொங்கல் விழா நடந்து வருகிறது.ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பால்குடம், மாவிளக்கு, கரகம் எடுத்து வழிபட்டனர்.300க்கு மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர். 100க்கு மேற்பட்டோர் தீச்சட்டி, முளைப்பாரி எடுத்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.