திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையாக, 6.89 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம், உதவி ஆணையர் விஜயன், ஆய்வாளர் கோவிந்தன், செயல் அலுவலர் தியாகராஜன், மேலாளர் விஜயன் ஆகியோர் முன்னிலையில் நேற்றுஎண்ணப்பட்டது. இதில், 6.89 லட்சம் ரூபாயும், 33 கிராம் தங்கம், 97 கிராம் வெள்ளியும் கிடைத்தது.