பதிவு செய்த நாள்
25
நவ
2011
11:11
கோபிசெட்டிபாளையம்: கோபி ஐயப்ப ஸ்வாமி கோவில் 30 வது ஆண்டு விழா, பிரம்ம உற்சவம், சங்காபிஷேக விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கிறது. கோபி ஐயப்ப ஸ்வாமி கோவில் 30வது ஆண்டு விழா, பிரம்ம உற்சவம், சங்காபிஷேக விழா மற்றும் புஷ்பாஞ்சலி விழா கொடியேற்றம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. ஐயப்ப ஸ்வாமிக்கு அபிஷேகம் ஆராதனை, மகா கணபதி அலங்காரத்தில் கோவில் வலம் வருதல் நடக்கிறது. தினமும் மாலை 6 மணிக்கு உற்சவர் வலம் வருதல் நடக்கிறது. 27ம் தேதி ஆதிகேசவ பெருமாள் அலங்காரத்திலும், 28ம் தேதி ஈஸ்வரன், 29ம் தேதி மஞ்சமாதா, 30ம் தேதி பந்தள ராஜா, டிச., 1ம் தேதி எரிமேலி சாஸ்தா அலங்காரத்தில் ஸ்வாமி வலம் வருகிறார். வரும் 2ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், யாக பூஜை துவக்கம், பகல் 12 மணிக்கு 31வது ஆண்டு துவக்க சதய விழாவை முன்னிட்டு, 108 வலம்புரி சங்காபிஷேகம், மாலை 4 மணிக்கு பலவித மலர்களை கொண்டு ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி, மாலை 6 மணிக்கு அச்சன்கோவில் அரசன் பூரண புஷ்கலை நாதன் அலங்காரத்தில் வலம் வருதல், இரவு 7 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. டிச., 3ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 10 மணிக்கு பால் குடம், தீர்த்த குடம் புறப்படுதல், காலை 11 மணிக்கு பால் தீர்த்த அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு உற்சவர் ஐயப்பன் ஜண்டை வாத்தியத்துடன் மலர் பல்லக்கில் புறப்படுதல், டிச., 4 தேதி காலை 9 மணிக்கு ஐயப்பன் அலங்காரத்தில் கோவில் வலம் வருதல், ஆராட்டு விழா, கொடி இறக்கம், மாலை 6 மணிக்கு ஆராட்டு குளத்தில் அனைவரும் பம்பா விளக்கு ஏற்றுதல் நடக்கிறது.