ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் ஆஞ்சநேயர் கோவிலில், நவம்பர் 27ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஈரோடு கருங்கல்பாளையம் காளிங்கராயன் வாய்க்கால் அருகே, யோக ஆஞ்சநேய கோவில் திருப்பணி நடந்து முடிந்தது. கும்பாபிஷேகம் யாஹ பூஜை, நாளை மாலை 6 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. 6.30க்கு மகா சங்கல்பம், புண்யாகவாசனம், வாஸ்து சாந்தி, முதற்கால வேள்வி நடக்கிறது. நவம்பர் 27ம் தேதி காலை 4 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை, 6 மணிக்கு கோமாதா பூஜை, காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து 8 மணிக்கு யோக ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷே விழா நடக்கிறது. காலை 10 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.