Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கரன்கோவிலில் தேரோட்டம் இளையான்குடி, புரவி எடுப்பு விழா இளையான்குடி, புரவி எடுப்பு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவிலில் அவ்வைக்கு முக்தி அளித்த புராதன நாவல் மரம் இரும்பு வேலியிட்டு பாதுகாப்பு
எழுத்தின் அளவு:
அழகர்கோவிலில் அவ்வைக்கு முக்தி அளித்த புராதன நாவல் மரம்  இரும்பு வேலியிட்டு பாதுகாப்பு

பதிவு செய்த நாள்

05 ஆக
2017
10:08

மதுரை அழகர்கோவில் சோலைமலை மண்டபம் முருகன் கோயில் அருகே அவ்வைக்கு முக்தி அளித்த நாவல் மரத்தை இரும்பு வேலியிட்டு கோயில் நிர்வாகம் பாதுகாத்து வருகிறது. அழகர்கோவில் மலை பழமையும், புராதன சிறப்பும் பெற்றது. கள்ளழகர் கோயிலில் இருந்து 3 கி.மீ., தொலைவில் அடர்ந்த வனத்தில் சோலைமலை மண்டபம் முருகன் கோயில் உள்ளது. முருகனின் ஆறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அவ்வையார் காலத்தில்  சோலைமலை மண்டபம் முருகன் கோயில் அருகே அடர்ந்த வனத்தில் நாவல் மரம் மீது அமர்ந்திருந்த முருகன், அவ்வையாரின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு, அவ்வையே உனக்கு சுட்டப்பழம் வேண்டுமா. சுடாத பழம் வேண்டுமா, எனக்கேட்டார். பழத்தில் ஏதையா சுட்டப்பழம், சுடாதபழம், என கேட்டு தனது
ஆணவத்தை புரிந்து கொண்டு அடக்கம் காக்க முருகன் நடத்திய திருவிளையாடல் என அவ்வையார் எண்ணி வருந்தினார் என்பது புராதன வரலாறு.

முக்தி அளித்த நாவல் அவ்வைக்கு முருகன் அருளால் முக்தி வழங்கிய மரமாக நாவல் மரம் இன்றளவும் போற்றப்படுகிறது. அழகர்கோவில் மலை, சோலைமலை மண்டபம் முருகன் கோயில், அதற்கு மேல் உள்ள என்றும் வற்றாத நூபுர கங்கை தீர்த்தம் ஆகியவற்றில் தரிசனம் மேற்கொள்ள நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வருவர். அவ்வைக்கு முக்தி அளித்த நாவல் மரம் பக்தர்களின் முக்கிய வழிபாட்டு  தலங்களில் ஒன்றாக உள்ளது.

அவ்வை காலத்து நாவல் மரம் பட்டுப்போகாமல் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மரத்திற்கு கீழ் பிள்ளையார் கோவில் உள்ளது. மரத்தின் புராதான வரலாறு குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் நாவல் மரம், மரத்தின் மீது முருகன், மரத்திற்கு கீழே அவ்வையார் படம் வரைத்து முருகனின் திருவிளையாடல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நாவல் மரத்தையும், அதன் புனிதம் காக்கவும் இரும்பு வேலியிட்டு கோயில் நிர்வாகம் பாதுகாத்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதி தெருவில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar