ஆக.,7 ல் சந்திரகிரஹணம் ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2017 03:08
ராமேஸ்வரம்: ஆக.,7 ல் சந்திரகிரஹணத்தை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை சாத்தப்படும் என கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.
ஆக.,7 ம் தேதி இரவு சந்திரகிரஹணத்தை யொட்டி, அன்று மாலை ராமேஸ்வரம் கோயிலில் சாயரட்சை பூஜைகள் நடைபெறும். பின் மாலை 6:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இரவு 10:52 மணிக்கு கோயிலில் இருந்து தீர்த்தவாரி சுவாமி புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி, தீர்த்தத்தில் தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். பின் கோயிலில் கிரஹணபிேஷகம், பள்ளியறை பூஜை நடக்கும் என கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி தெரிவித்தார். எனவே ஆக., 7 ம் தேதி மாலை 6:00 மணிக்கு பிறகு பக்தர்கள் கோயிலுக்குள் புனித நீராடவும், தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.