மதுரை: சந்திர கிரகணத்தை முன்னிட்டு அழகர்கோவில் கள்ளழகர் கோயில் மற்றும் உப கோயில்களில் இன்று பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து கூறியதாவது: இன்று இரவு சந்திர கிரகணம் ஏற்படுவதால் கள்ளழகர் கோயில், ராக்காயி அம்மன் கோயில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயில், மேலுார் ஆஞ்சநேயர் கோயில்களில் இன்று மாலை 6:30 மணிக்குள் அனைத்து பூஜைகளும் முடிந்து நடை அடைக்கப்படும். நாளை காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்படும். இன்று காலை சுந்தரராஜப்பெருமாள், தேருக்கு எழுந்தருள்கிறார். காலை 9:00 மணிக்கு மேல் காலை 10:௦௦ மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. தேர் நிலைக்கு வந்தவுடன் மாலை 4:00 மணிக்கு மேல் பூப்பல்லக்கு நடக்கிறது. சுந்தர், கல்பனாதேவி குழுவினரின் வள்ளி திருமணம் நாடகம் இரவு 7:00 மணிக்கு நடக்கிறது. கிரகணம் முடிந்தவுடன் இரவு 1:00 மணிக்கு மேல் 18 ம் படி கருப்பண்ணசுவாமிக்கு சந்தனம் சாத்துப்படி நடக்கும், என்றார்.