கனி வகைகளில் பேரீச்சையும் மாதுளையும் நபிகள் நாயகத்திற்கு பிடித்தமானவை. மாதுளையை அதன் உள்தோலுடன் சாப்பிட்டால் அது குடலை வலுப்படுத்தும். பேரீச்சையுடன் தர்ப்பூசணி பழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் ஒன்றின் உஷ்ணம் மற்றதின் குளிர்ச்சியை சமமாக்கி விடும். பேரீச்சம் பழத்துடன், வெள்ளரிக்காயையும் சேர்த்து சாப்பிடலாம். இறைச்சி சமைக்கும் போது அதில் அதிகமாக சுரைக்காயை போட வேண்டுமென தனது துணைவியார் ஆயிஷா அம்மையாரிடம் நாயகம் சொல்வார். ஏனெனில் கவலை நிரம்பிய மனதிற்கு அது புத்துணர்வு ஊட்டுவதாகவும் மருந்தாகவும் இருக்கும் என அவர் சொல்லியிருக்கிறார். இலந்தை, திராட்சை, அத்தி ஆகியவை சாப்பிட ஏற்ற பழங்கள்.