ஸ்ரீரங்கத்தில் தங்கி ரங்கநாதருக்கு வைணவ சம்பிரதாயத்துக்கும் ராமானுஜர் சிறப்பாக கைங்கர்யம் செய்து வந்தார். இடையில் சோழராஜன் கொடுமையால் சிறிது காலம் ராமானுஜர் ஸ்ரீரங்கத்தை விட்டு விலகி இருக்கும்படி இருந்தது. அதனால், ஸ்ரீரங்கத்திலிருந்து வெகு தூரத்தில் வடமேற்கிலுள்ள மலைப்பாங்கான திருநாராயணபுரம் சென்றார்.
ஒருநாள் தனது நெருக்கமான இரண்டு சீடர்களை அழைத்துக்கொண்டு காட்டு வழியே சென்றார். இரவுப் பொழுதை கழிக்க அங்குள்ள குடிசையில் தங்க விரும்பினார். அது வேடனின் குடிசை எனத் தெரிந்தது. வேடன் காட்டு விலங்குகளை வேட்டையாடச் சென்றதால் மனைவி மட்டும் இறந்தாள். சன்னியாசியைக் கண்டதும் வேடன் மனைவி மகிழ்ச்சி கொண்டாள். அவர்களுக்கு விருந்தளிக்க வேண்டும். ஆனால் அங்கோ மிருகங்களின் இறைச்சிகளே இருந்தன. அதனால் வருத்தமடைந்தாள். வந்திருந்தவர்கள் பசியைக் காட்டிக் கொள்ளாமல் இருந்தனர்.
சிறிது நேரத்தில் வேடன் காய்கள், பழங்கள், கிழங்குகளுடன் வந்தான். மனைவி வியப்படைந்தாள். இன்று விலங்குகளை வேட்டையாட மனம் வரவில்லை. தினமும் மாமிசம் சாப்பிடுகிறோம். இன்று காய்கனிகளைச் சாப்பிடலாமே என்றுதான் கொண்டு வந்தேன். என்றான். வேடன், பசியோடிருந்த ராமானுஜர் மற்றும் அவர் சீடர்களுக்குக் காய்கனிகளைக் கொடுத்து இரவு தங்க வைத்துவிட்டுப் பாதுகாப்பாக காலையில் காட்டின் எல்லையில் கொண்டு விட்டார். ராமானுஜர் இறைவனின் கருணையை எண்ணி ஆச்சர்யமடைந்தார்.