புதுச்சேரி: சிவ சிந்தனையில் நடைப்பயணம் பாதயாத்திரைக்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சிறுத்தொண்ட நாயனார் திருத்தொண்டு சபை சார்பில் "சிவ சிந்தனையில் நடைபயணம் பாத யாத்திரை நாளை நடக்கிறது. வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து நாளை காலை 6.30 மணிக்கு துவங்குகிறது. வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் நிறைவடைகிறது. இதையடுத்து, திருக்காமீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை சிறுத்தொண்ட நாயனார் திருத்தொண்டு சபையினர் செய்து வருகின்றனர்.