பதிவு செய்த நாள்
10
ஆக
2017
12:08
திருப்பூர்: ஜீவா காலனி கருப்பராயன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். திருப்பூர், காந்திநகர் ஜீவா காலனியில் உள்ள கருப்பராயன், கன்னிமார் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா, கடந்த 6ம் தேதி, பூச்சாட்டு , பொறி மாற்றுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, விநாயகர் பொங்கல், கலச தீர்த்தம் அழைத்து வருதல் மற்றும் அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. விழாவில், நேற்று காலை, மாவிளக்கு பூஜையும்; பகல், 12 மணிக்கு உச்சி கால பூஜை, கிடா வெட்டுதலும் நடைபெற்றது. இதைமுன்னிட்டு, கன்னிமார் அம்மன் மற்றும் கருப்பராயன் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.