ஆண்டிபட்டி மதுரை காளியம்மன் திருவிழா: பூக்குழி இறங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2017 11:08
பழநி: பழநி அருகே ஆண்டிபட்டி மதுரை காளியம்மன் கோவில் ஆடித்திரு விழாவில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆண்டிபட்டி ஜெ.ஜெ.,நகர், புதுமடைப்புதுார் மதுரை காளியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா 2 நாட்கள் நடந்தது. நேற்று செட்டியாரப்பன், நாககன்னி, சமயபுரம் மாரியம்மன், தன்னாசியப்பன் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. காலை 6:00 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆண்டிப்பட்டி, குதிரையாறு அணை, பாப்பம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆன்மிக சொற்பொழிவுகள், மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.