புளியங்குடி : புளியங்குடி கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. புளியங்குடியை அடுத்த சிந்தாமணி சொக்கலிங்க சுவாமி சமேத மீனாட்சியம்மன் கோயிலில் உலகில் அமைதி நிலவ வேண்டி 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக கணபதி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருவீதியுலா நடந்தது. தொடர்ந்து நந்தீஸ்வரருக்கு 108 சங்குகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் தேர் திருப்பணிக் கமிட்டி தலைவர் தேவகி குழந்தைவேல், உறுப்பினர் சித்துராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முத்துவளவன், மாரிமுத்து, குமார், முருகேசன், சண்முகசுந்தரி, மாரியப்பன், முத்துக்குமார் செய்திருந்தனர்.