பதிவு செய்த நாள்
10
ஆக
2017
01:08
ஈரோடு: வீரமுத்தியம்மன் கோவில் ஆண்டு திருவிழாவில், ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு, பெரியசேமூர் குறிஞ்சி நகரில் உள்ள, வீரமுத்தியம்மன் கோவில் பொங்கல் திருவிழா, ஜூலை, 25ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம், தீர்த்த ஊர்வலம் நடந்தது, அக்ரஹாரம் காவியாற்றில் இருந்து பக்தர்கள், தீர்த்தக்குடம், அக்னிச்சட்டி, அலகு குத்தி வந்தனர். நேற்று குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் காப்புக் கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்றியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என, கோஷமிட்டனர். அதைத்தொடர்ந்து, மாலை வாண வேடிக்கை, அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று பூ, கொடிக் கம்பம், காவிரி ஆற்றுக்கு சென்று அடைதல் நிகழ்ச்சி நடக்கிறது.