பதிவு செய்த நாள்
11
ஆக
2017
12:08
ஊட்டி : ஊட்டி பாம்பேகேஷில் பகுதியில் உள்ள ராகவேந்திரா சுவாமி மடத்தில், 346வது ஆராதனை மகோத்சவ விழா நடந்தது. மூன்று நாட்கள் நடந்த மகோத்சவ விழாவில், கனகாபிேஷகம், பல்லக்கு சேவை, தொட்டில் சேவை, மகாபூஜை, சந்தன அபிேஷகம், சர்வ சேவை, பஞ்சாமிருத அபிேஷகம், பாலாபிேஷகம், துளசி அர்ச்சனை நடந்தது. நிறைவு நாளான நேற்று சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பாட்டுகச்சேரி, ராகவேந்திரா வித்யாலயா குழுவினரின் நடன நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.