அய்யம்பேட்டை:அய்யம்பேட்டை அம்பேத்கர் நகர், படவேட்டம்மன் மற்றும் கங்கையம்மன் கோவில்களில், ஆடித்திருவிழா விமரிசையாக நடந்தது. ஆடித்திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, படவேட்டம்மன் மற்றும் கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. பகல், 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:30 மணிக்கு காப்பு கட்டிய பக்தர்கள், அலகு குத்தி வாகனங்களை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன் பின், தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.