தேவதானப்பட்டி, சில்வார்பட்டியில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை பொய்த்துப் போனதால் குளம், கண்மாய்கள் வறண்டன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயப் பணிகள் பாதிப்படைந்தன. கூலித் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இந்நிலையில் சில்வார்பட்டி கிராம மக்கள் சார்பில் மழை, கிராம நலன் வேண்டிமுத்தாலம்மன், காளியம்மன், விநாயகர்கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கப்பட்டது.