பதிவு செய்த நாள்
12
ஆக
2017
02:08
ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவில்லிபுத்துாரில் கொட்டும் மழையிலும் முளைப்பாரி விழா நடந்தது. நகர் மாரியம்மன்கோயில் கிழக்கு மற்றும் மேற்கு தெரு, மாயாண்டிபட்டி தெரு, ஊரணிபட்டி, மடத்துபட்டி, சிவந்திபட்டி, முதலியார்பட்டி தெரு, கீழப்பட்டி, காந்திநகர் பகுதியினர் சார்பில் முளைப்பாரி திருவிழா நடந்தது. மழைபெய்தநிலையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் தங்கள் பகுதிகளிலிருந்து ஊர்வலமாக பெரியமாரியம்மன் கோயிலுக்கு வந்து, அம்மனை வணங்கி, பைபாஸ்ரோடு, ராமகிருஷ்ணாபுரம் வழியாக பட்டத்தரசியம்மன் கோயிலுக்கு வந்து, அங்குள்ள குளத்தில் முளைப்பாரி களையிட்டு தரிசனம் செய்தனர்.