பதிவு செய்த நாள்
12
ஆக
2017
05:08
ஆக.12: திருச்செந்தூர் முருகன் ஆவணி உற்ஸவம் ஆரம்பம்
ஆக.13: சஷ்டி விரதம், முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல், கீழ்த்
திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோயில் அனுமனுக்கு திருமஞ்சனம்
ஆக.14: கிருஷ்ண ஜெயந்தி, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
ஆக.15: கார்த்திகை, அஷ்டமி விரதம், முருகனுக்கு அபிஷேகம் செய்தும், பைரவருக்கு வடைமாலை சாத்தியும் வழிபடுதல், புகழ்ச்சோழ நாயனார் குருபூஜை, சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல், தஞ்சாவூர் மாவட்டம் வரகூர் வெங்கடேசப் பெருமாள் உறியடி உற்ஸவம்
ஆக.16: நவமி விரதம், ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், சபரி மலையில் இன்று முதல் ஆறுநாள் நடை திறப்பு
ஆக.17: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர், திருவாரூர் மாவட்டம் திருவலஞ்சுழி விநாயகர் கோயில்களில் சதுர்த்தி உற்ஸவம் ஆரம்பம்
ஆக.18: ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், கரிநாள், திருச்செந்தூர் முருகன் கோயிலில் சண்முகர் உருகுசட்டசேவை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளல்.