தர்மம் செய்வது நன்மை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தடை செய்யப்பட்ட வழியில் வரும் பணத்தினால் தர்மம் செய்வது எவ்வித பயனையும் தராது என்கிறார் நபிகள். ஒரு மனிதன் புனித ஹஜ் யாத்திரை செல்கிறான். இருகை ஏந்தி அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி பிரார்த்தனை செய்கிறான். ஆனால் அவன் தடை விதிக்கப்பட்ட ஆடையை அணிந்திருக்கிறான். தடை செய்யப்பட்ட உணவு, பானத்தை அருந்துகிறான். அநியாயமாய் சம்பாதித்த பணத்தில் வளர்ந்திருக்கிறான். இவனுடைய பிரார்த்தனை இறைவனால் ஏற்கப்படாது. தடை செய்யப்பட்ட வழியில் பொருளை தேடி அதை கொண்டு தர்மம் செய்தால், அவருக்கு எந்த நற்கூலியும் இல்லை. அந்த பாவ சுமையை அவரே தாங்கிக் கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட ஒரு உருண்டை உணவு, ஒருவனது வயிற்றை அடையுமானால் அவனுடைய தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை.