பதிவு செய்த நாள்
14
ஆக
2017
02:08
தூத்துக்குடி:குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர்.தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள கடற்கரை கிராமம் குலசேகரன்பட்டினம்.நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு துறைமுக நகரமாகவும் விளங்கியுள்ளது.இங்குள்ள முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் தசரா திருவிழாசர்வதேசஅளவில் பிரசித்திபெற்றதாகும். மைசூர் திருவிழாவைப்போல
இங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். மேலும் விழாவில் வித்தியாசமான முறையில்பங்கேற்கும் ஆண்களும், பெண்களும், திருநங்கைகளும் தங்களுக்கு பிடித்தமான காளி, விநாயகர், முருகன், கிருஷ்ணன், அனுமன், குறவன், குறத்தி, நர்ஸ், போலீஸ் போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து ஆடிப்பாடி கோயிலுக்கு வருவது நடக்கிறது. இந்த ஆண்டுக்கான விழா வரும் செப்டம்பர் 21ல் கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள் நடக்கிறது.
செப்டம்பர் 30ல் இரவு 12 மணிக்குஇரவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் பல லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மகிஷாசுரனை வதம் செய்யும் அன்னையை தரிசிப்பார்கள்.அவர்கள் சிவபெருமான், அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர். இதற்காக கைகளில் காப்பு கட்டிவிரதம் இருப்பது நேற்று துவங்கியது. சிலர் தங்களது இருப்பிடங்களிலேயே விரதத்தை துவக்குவர். சிலர் கோயிலுக்கு வந்துவிரதத்தை துவக்குகின்றனர்.