நரசிங்கபுரம்: மழை வேண்டி, அம்மனுக்கு பெண்கள் கூழ் படையல் வைத்து வழிபாடு செய்தனர். ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம் பெரியமாரியம்மன் கோவிலில் நேற்று, ஆடி மாத பூஜை நடந்தது. அதில், மழை வேண்டி அம்மனுக்கு பெண்கள், கூழ் காய்ச்சி எடுத்து வந்து, படையல் வைத்து வழிபாடு செய்தனர். கூழ், அன்னதானமாக வழங்கப்பட்டது. இதில், நரசிங்கபுரம், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.