ராஜஸ்தான் மாநில நாத்வாரா என்ற கோயிலில் உறையும் கிருஷ்ணரான நாத்ஜீ, பகவானுக்கு என்னென்ன நைவேத்தியம் படைக்க வேண்டும் என்று ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். அதில் வெண்ணெய், பாதம், பருப்பு, பிஸ்தா, பருப்பு, லட்டு, இனிப்பு பூரிகள், மோர்க்குழம்பு ஆகியவையெல்லாம் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. குழந்தை கிருஷ்ணர் கோகுலத்தில் வளர்ந்ததால், அதன் பெருமையைக் கூறவே அவர் பிறந்த கிருஷ்ண ஜயந்தி திருநாளை கோகுலாஷ்டமி என்றும் அழைக்கிறோம். கேரள மாநிலத்தில் அஷ்டமி ரோகிணி என்ற பெயரில் இந்த விழா நடைபெறுகிறது. வட மாநிலங்களில் சில இடங்களில், கிருஷ்ண ஜயந்தி வழிபாடுகளை நள்ளிரவில் கொண்டாடுகிறார்கள். அவர் பிறந்தது நள்ளிரவில் என்பதால் இப்படியொரு நடைமுறையாம்!