திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் லட்சுமி தீர்த்த குளம் உள்ளது. மழை பெய்தால் குளம் நிரம்பும். இக்குளத்தின் நீரில் உப்பு, மிளகு, பொரி போட்டால் உடலிலுள்ள மரு, பத்து மறைந்துவிடும் என்பது மக்கள் நம்பிக்கை. இரண்டு ஆண்டுகளாக மழையின்றி குளம் வறண்டது. சில நாட்களாக பெய்த மழையால் அக்குளத்தில் சிறிது தண்ணீர் உள்ளது. சுகாதாரமில்லாத அக்குளத்தை ஸ்கந்தகுரு வேத சிவாகம பாடசாலை மாணவர்கள் சுத்தம் செய்தனர்.