திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா: நாளை கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2011 11:11
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நாளை(நவ., 30) நடக்கிறது. கொடிக் கம்பம் முன் காலை 9.15 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள்வர். பூஜைகள் முடிந்து 9.45 மணிக்குள் கொடி ஏற்றம் நடக்கும். விழாவை முன்னிட்டு தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதிவுலா வந்து அருள்பாலிப்பார். முக்கிய நிகழ்ச்சியாக டிச., 7ல் பட்டாபிஷேகம், டிச., 8 ல் தேரோட்டம், மாலையில் மலைமேல் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். டிச.9ல் சுவாமி தீர்த்த உற்சவம் நடக்கும்.