கோலாலம்பூர்: மலேஷியாவில் உள்ள பழமையான சீக்கிய கோயில் புனரமைப்பிற்காக அந்நாட்டு அரசு 16 ஆயிரம் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் உள்ள ஷபா மாகாணத்தில், கொட்டாகினாபாலு நகரில் சீக்கிய குருதுவார் கோயில் ஒன்று உள்ளது. இது 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலை புனரமைப்பிற்காக 50 ஆயிரம் ரிங்கிட் (15,633) டாலர்) நிதி ஒதுக்கியுள்ளதாக துணைப்பிரதமர் முகூதீன்யாசின் தெரிவித்தார். இதே போன்று நாட்டில் உள்ள மிகவும் பழமையான கோயில் புனரமைப்பிற்கு நிதி ஒதுக்கப்படும் எனவும் பிரதமர் கூறினார். முன்னதாக கடந்த தீபாவளியன்று இக்கோயிலுக்கு வந்திருந்த ஷபா மாகாணம் வந்திருந்த மலேஷி இந்திய காங்கிரஸ் கட்சி்த்தலைவர் கட்சி சார்பில் 40 ஆயிரம் ரி்ங்கிட் நிதி அளித்தார்.