Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விநாயகருக்கு பூஜை செய்த யானைகள்: ... வேளாங்கண்ணி திருவிழா பாதயாத்திரை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ ராம நாம பஜனைமடம் திறப்பு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2017
12:08

அவிநாசி :அவிநாசியில், பெரிய தேர் நிலையம் அருகே, வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அதையொட்டி, ஸ்ரீ வியாசராஜர் ராமநாம பஜனை மடம் அமைந்துள்ளது. வியாசராஜர் மூலம் அமைக்கப்பட்ட இந்த மடம், சிதிலமடைந்து காணப்பட்டது. கூட்டு வழிபாட்டின் நோக்கத்தை உணர்த்தவும், பஜனை பிரியரான ஆஞ்சநேயர் சன்னதியில்,ஸ்ரீ ராம நாமம் ஒலிக்கும் வகையிலும், மடத்தை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பக்தர்களின் முயற்சியால், பஜனை மடம் புனரமைக்கப்பட்டு, நேற்று திறக்கப்பட்டது. கரிவரதராஜ பெருமாள் கோவில் முரளி பட்டாச்சார்யார் முன்னிலையில், சிறப்பு ஹோமம் நடந்தது. முன்னதாக விஜயமங்கலம் சொக்கலிங்கம் சொற்பொழிவு ஆற்றினார். முன்னாள் பி.டி.ஓ., சண்முகசுந்தரம் குழுவினர் இன்னிசை மற்றும் அன்னூர் சண்முகம் குழுவினர் நாம சங்கீர்த்தன பஜனை நடந்தது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், இன்று காலை, ஸ்ரீ சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலையில், கோத்தகிரி அரையட்டி, அருணாசலமஹிமா சுவாமி குழுவினரின் சிறப்பு பஜனை இசை நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்தர்கள் பேரவையினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar