பழுவூர் கோவிலில் டிச., 21ல் சனிப்பெயர்ச்சி பரிகார பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2011 12:11
திருச்சி: பழுவூர் நவக்கிரக ஸ்தலம் விஸ்வநாதர் சமேத விசாலாட்சி அம்மன் கோவிலில் டிசம்பர் 21ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 9 கி.மீ., தொலைவில் உள்ளது பழுவூர் கிராமம். இங்குள்ள விஸ்வநாதர் சமேத விசாலாட்சி அம்மன் கோவிலில் நவக்கிரகங்கள் தங்கள் சக்திகளுடன் வீற்றிருப்பது சிறப்பம்சமாகும். சிறப்பு வாய்ந்த கோவிலில் சனீஸ்வர பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்வதை முன்னிட்டு கோவிலில் எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவானுக்கும் சக்திகளோடு கூடிய நவக்கிரகங்களுக்கும் விசேஷ பூஜைகள் டிசம்பர் 21ம் தேதி காலை 7.45 மணிக்கு நடக்கிறது. துலாம், மேஷம், கும்பம், சிம்மம், மிதுனம், மீனம், தனுசு ராசிக்காரர்கள் பரிகாரம் செய்துக் கொள்ளலாம். சனிப்பெயர்ச்சி அன்று திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து பழுவூருக்கு அரசு போக்குவரத்துக் கழகத்தால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சனிப்பெயர்சி சிறப்பு பூஜை ஏற்பாடுகளை கோவில் தக்கார் அன்பழகன், நிர்வாக அதிகாரி அய்யம்மாள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் குவிவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்து வருகின்றனர்.