கல்லிடைக்குறிச்சி கோயிலில் ராதா மாதவ விவாக மகோற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2011 12:11
அம்பாசமுத்திரம் : கல்லிடக்குறிச்சி பெருமாள் கோயிலில் ராதா மாதவ விவாக மகோற்சவம் நடந்தது. கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப் பெருமாள் கோயிலில் ராதா மாதவ விவாக மகோற்சவம் இரண்டு நாட்கள் நடந்தது. முதல் நாள் காலையில் தோடய மங்களம், குருகீர்த்தனைகள், அஷ்டபதி பஜனை, மாலையில் சுவாமி படம் வீதி உலா, நகர சங்கீர்த்தனம், இரவு பஞ்சபதி (தாசர் கீர்த்தனைகள்), பூஜோபசார மற்றும் தியான கீர்த்தனைகள், தீப பிரதக்ஷிணம், டோலோத்சவம் நடந்தது. இரண்டாம் நாள் காலையில் உஞ்சவ்ருத்தி பஜனை, ராதா மாதவ விவாக மகோத்சவம் நடந்தது. இரவு ஆஞ்சநேய உத்சவம் நடந்தது. ஏற்பாடுகளை கல்லிடைக்குறிச்சி குரு கிருபா பஜனை மண்டலியினர் செய்திருந்தனர்.